முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் தோல்வியால் லல்லு சாப்பிட மறுப்பு - டாக்டர்கள் வெளியிட்ட தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2019      இந்தியா
Image Unavailable

ராஞ்சி : பீகாரில் ஏற்பட்ட தேர்தல் தோல்வியால், லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளிவந்த அன்று நாள் முழுவதும் ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லல்லு பிரசாத் உணவு சாப்பிட மறுத்து கவலையோடு இருந்ததாக, அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லல்லு, மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்று ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். லோக்சபா தேர்தலுக்காக அவர் சிறையிலிருந்து பரோல் கேட்டும் கிடைக்கவில்லை. நீதிமன்றத்தை நாடியும் பயனளிக்கவில்லை. பின், உடல் நலமின்றி ராஞ்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில், சிறையில் இருந்தபடியே தன் மனைவி ராப்ரி தேவி மற்றும் மகன் தேஜஸ்வி யாதவுக்கும், ஆர்.ஜே.டி. தொண்டர்களுக்கும் கடிதம் எழுதி உற்சாகப்படுத்தி வந்தார். தேர்தலில் சிறப்பான வெற்றி கிடைக்கும் என்றும் அவர் தொடர்ந்து நம்பிக்கை தெரிவித்து வந்தார்.

ஆனால், அவரது எதிர்பார்ப்புக்கு மாறாக, ஆர்.ஜே.டி. கட்சி பீகாரில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. கூட்டணி கட்சியான காங்கிரஸ் மட்டும் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. அங்கு மொத்தம் உள்ள 40 தொகுதிகளில், பா.ஜ.க. ஐக்கிய ஜனதா தள கூட்டணி 39 ஐ கைப்பற்றியது. தேர்தல் முடிவுகள் வெளியான அன்று, நிலவரங்களை கவனித்து வந்த லல்லு, வழக்கமான அவரது உணவை சாப்பிட மறுத்தார் என்று ராஞ்சி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து