முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. பதவியை இன்று ராஜினாமா செய்கிறார் வசந்தகுமார் - சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து சபாநாயகரிடம் இன்று கடிதம் கொடுக்க இருப்பதாக கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர் எச். வசந்தகுமார், பாராளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவர் தனது நாங்குநேரி தொகுதி சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார். சென்னைஅறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வசந்தகுமார் வாழ்த்து பெற்றார். அதன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர்,

நாங்குநேரி சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் - தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி ஆகியோர் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். சபாநாயகர் நாளை (இன்று)சென்னையில் இருந்தால் உடனடியாக ராஜினாமா செய்து விட்டு டில்லி செல்ல திட்டமிட்டிருக்கி்றேன் என்றார் வசந்தகுமார்.

இதற்கிடையில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடப்போவது ஏற்கனவே அத்தொகுதியில் வெற்றி பெற்றகாங்கிரசா? அல்லது தி.மு.க.வா? என்பது குறித்து அரசியல் களத்தில் விவாதங்கள் எழுந்திருக்கின்றன, மேலும் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் சமத்துவ மக்கள் கழகத்தின் தலைவர் எர்ணாவூர் நாராயணனும் வாய்ப்புக் கோர இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து