முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிரியர் தகுதித் தேர்வு ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியீடு

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஆசிரியர் தகுதித் தேர்வு ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்விற்கு மார்ச் 15-ம் தேதி முதல் ஏப்ரல் 12-ம் தேதி மாலை ஐந்து மணி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் எழுதுவதற்கு ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 341 பேரும், இரண்டாம் தாள் எழுதுவதற்கு நான்கு லட்சத்து 20 ஆயிரத்து 815 பேரும் என ஆறு லட்சத்து நான்காயிரத்து 156 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களுக்கான தகுதித் தேர்வு ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தேர்வர்கள் தங்களது பயனர் அடையாளம் (யூசர் ஐடி), கடவுச்சொல் பதிவு செய்து பதிவிறக்கம் செய்யும் வகையில் தற்பொழுது ஆசிரியர் தேர்வு வாரிய
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் நுழைவுச் சீட்டினை பிரிண்ட் எடுத்து தேர்வறைக்கு கொண்டு வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் 32 மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களின் விவரமும், மாவட்ட கல்வி அலுவலகத்தின்தொடர்பு எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து