முக்கிய போட்டிகளில் பின்வரிசை வீரர்கள் ரன் குவிப்பது அவசியம்- விராட் கோலி சொல்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2019      விளையாட்டு
virat kohli india team 2019 05 26

லண்டன் : உலகக் கோப்பை போன்ற முக்கியமான தொடர்களில் பின்வரிசை வீரர்கள் ரன் குவிப்பது அவசியம் என்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். 
12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் தொடங்க இன்னும் 4 தினங்களே உள்ளது. வருகிற 30-ம் தேதி முதல் ஜூலை14-ம் தேதி வரை உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா நடக்கிறது. உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு 10 நாடுகளும் பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டு இருந்தன. 1983 மற்றும் 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்தது. அதன்படி நியூசிலாந்துடன் இந்திய அணி நேற்று மோதிய பயிற்சி ஆட்டத்தில் தோல்வியை தழுவியது.

பயிற்சி ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

நாங்கள் திட்டமிட்டு ஆடவில்லை, எங்கள் முன்பு கடுமையான சவால்கள் இருந்தன. இங்கிலாந்தில் உள்ள சில இடங்களில் தட்ப வெப்பநிலை, ஆடுகள தன்மை ஆகியவற்றை எதிர்பார்க்கவில்லை. 50 ரன்னில் 4 விக்கெட் என்ற நிலை 180 ரன்னை இலக்காக நிர்ணயித்தது நல்ல முயற்சியாகும். உலகக்கோப்பை போன்ற முக்கியமான போட்டிகளில் முன்னிலை பேட்ஸ்மேன்கள் ஆடாத போது பின்கள வீரர்கள் ரன் குவிப்பது அவசியமானது. இதற்கு அவர்கள் இங்குள்ள மைதானத்தில் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். ஜடேஜா நம்பிக்கை அளிக்கும் வகையில் பின்கள வரிசையில் ஆடினார். எங்களது பந்து வீச்சு நன்றாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய அணி 2-வது பயிற்சி ஆட்டத்தில் வங்காள தேசத்தை 28-ம் தேதி சந்திக்கிறது. அதே தினத்தன்று நியூசிலாந்து அணி வெஸ்ட் இண்டீசை சந்திக்கிறது. நேற்று முன்தினம் நடந்த மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 12 ரன்னில் இங்கிலாந்தை தோற்கடித்தது. நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான்- வங்காளதேசம், தென்ஆப்பிக்கா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து