மோடி பதவியேற்பு விழா: ரஜினி, கமலுக்கு அழைப்பு

திங்கட்கிழமை, 27 மே 2019      இந்தியா
kamal-modi-rajini 2019 05 27

புது டெல்லி : பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மோடி வரும் 30-ம் தேதி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.  ஜனாதிபதி மாளிகையில் மாலை 7 மணிக்கு நடைபெறும் இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், உலக நாடுகளின் தலைவர்கள் உள்பட பல்வேறு முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோருக்கும் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கும், மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்பது குறித்து இன்னும் கமல்ஹாசன் முடிவு எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து