வாக்காளர்களை ஈர்க்கும் கவர்ச்சி ராகுலிடம் இல்லை: சிவசேனா

திங்கட்கிழமை, 27 மே 2019      இந்தியா
rahul-shivsena 2019 05 27

மும்பை : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் வாக்காளர்களை ஈர்க்கும் கவர்ச்சி இல்லை என்று சிவசேனா விமர்சித்துள்ளது.  இது குறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பெற்ற தோல்வியைக் காட்டிலும் மிக மோசமான தோல்வியை இந்த முறை காங்கிரஸ் பெற்றுள்ளது. இதற்கான காரணம், ராகுல் காந்தியின் ஆளுமை வாக்காளர்களைக் கவரவில்லை என்பதே ஆகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தியின் பேச்சுகள் மக்களை கவர்ந்திழுக்கும் வகையில் இல்லை என்றும், யாருக்கும் முன்மாதிரியாக ராகுல் இருப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி தொண்டர்களை இழந்து வருவதாகவும், கிழக்கு உத்தர பிரதேசத்தின் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தியை நியமித்த போதும், எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும், கடந்த முறையை விட ஒரு தொகுதி குறைவாகத்தான் காங்கிரஸ் பெற்றுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து