முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் அருகே தண்டவாளத்தில் நாசவேலை: முத்துநகர் எக்ஸ்பிரஸ் விபத்திலிருந்து தப்பியது:

திங்கட்கிழமை, 27 மே 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தண்டவாளத்தில் செய்யப்பட்ட நாசவேலையிலிருந்து முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் தப்பிய சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியிலிருந்து சென்னை எழும்பூருக்கு சென்றிடும் முத்துநகர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (12694) நேற்று முன்தினம் இரவு கள்ளிக்குடி ரயில் நிலையத்தை தாண்டி திருமங்கலம் நோக்கி வந்துள்ளது.அப்போது இந்த ரயில் சுமார் 10.30மணியளவில் சிவரக்கோட்டை கிராமத்திற்கு முன்பாக ஒரு தனியார் பெட்ரோல் பங்கின் பின்புறம் வந்தபோது தண்டவாளத்தில் கிடந்த ஒரு தடுப்பின் மீது பயங்கர சத்தத்துடன் மோதியுள்ளது.அதில் எந்தவித சேதம் ஏதும் ஏற்படாததால் பயணத்தை தொடர்ந்த ரயில் திருமங்கலம் ரயில் நிலையத்தை வந்தடைந்தது.அப்போது முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் லோகோ பைலட்,சிவரக்கோட்டை பகுதியில் தண்டவாளத்தில் கிடந்த தடையின் மீது ரயில் மோதிய விபரத்தை தெரிவித்துள்ளார்.இதையடுத்து ரயில்வே துறை உயரதிகாரிகள் உத்தரவின் பேரில் விருதுநகர் ரயில்வே போலீசார் மற்றும் பணியாளர்கள் சம்பவ பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் லோகோ பைலட் கூறிய இடத்தில் சுமார் மூன்றரை அடி நீளமுள்ள சிமெண்ட் தூண் உடைந்து சிதறிக் கிடந்தது தெரிய வந்தது.இந்த சிமெணட் தூண் நிலங்களை அளவீடு செய்து எல்லைக் கல்லாக நடப்படுவது என்று தெரியவந்தது. இதனை தொடர்ந்து மோப்பநாய் மற்றும் தடவியல் நிபுணர்கள் உதவியுடன் தண்டவாளத்தில் சிமெண்ட் தூணை வைத்து நாசவேலையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நான்கு வழிச்சாலை பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து மர்ம நபர்களின் நடமாட்டத்தினை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.வழக்கம் போல் சிவரக்கோட்டை பகுதியில் அதிவேகமாக வந்திடும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்,தண்டவாளத்தின் குறுக்கே மர்ம நபர்களால் வைக்கப்பட்டிருந்த சிமெண்ட் தூணின் மீது மோதி விபத்தில் சிக்கிடாமல் சென்றதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக விருதுநகர் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்திடாமல் தடுத்திடும் வகையில் திருமங்கலம் விருதுநகர் இடையிலான ரயில்பாதையில் டிராலிகள் மூலம் ரயில்வே போலீசாரும் பணியாளர்களும் ரோந்து சென்றிட வேண்டும் என்பதே பாதுகாப்பினை விரும்பிடும் ரயில் பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து