திருப்பதியில் சந்திரசேகர ராவ் குடும்பத்துடன் சாமி தரிசனம்

திங்கட்கிழமை, 27 மே 2019      இந்தியா
Chadrasekar rao family darshan tirupathy 2019 05 27

திருமலை : தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் குடும்பத்தினர் ஐதராபாத் பேகும்பேட்டை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு நேற்று முன்தினம் மாலை ரேணிகுண்டா வந்தனர். பின்னர் அங்கிருந்து காரில் திருமலைக்கு வந்னர். திருமலைக்கு வந்த சந்திரசேகர ராவை, திருமலை - திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை அதிகாரி சீனிவாசராஜூ, தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு அதிகாரி கோபிநாத்ஜாட்டி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். சந்திரசேகர ராவும், குடும்பத்தினரும் திருமலையில் உள்ள கிருஷ்ணா விடுதியில் இரவு தங்கி ஓய்வெடுத்தனர். நேற்று காலை வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரத்தில் சாமி தரிசனம் செய்தார். திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு லட்டு, தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து