முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரத்தில் அப்துல்கலாம் அறக்கட்டளையின் புதிய அலுவலகம் திறப்பு.

புதன்கிழமை, 29 மே 2019      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமேசுவரம்,மே,29: மறைந்த இந்திய குடியரசு முன்னாள் தலைவர் ஏ,பி,ஜே அப்துல்கலாம் குடும்பத்தினர் சார்பில்  ராமேசுவரத்தில் இயங்கி வரும் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளையின் புதிய  அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது. 
 இந்திய குடியரசு முன்னாள் தலைவர் ஏ,பி,ஜே அப்துல்கலாம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி காலமானார். மாணவர்களுக்கும்,இளைஞர்களுக்கும் பல  நல்ல கருத்துகளை எடுத்துறைத்த அப்துல்கலாமின் நினைவாக அவரது குடும்பத்தினர்  அப்துல்கலாம் பெயரில் ஏ.பி.ஜே. அப்துல்கலாம்  சர்வதேச அறக்கட்டளை ஒன்றை தொடங்கி  மாணவர்களும்,இளைஞர்களும், மீனவர்களும் பயன்பெறும் வகையில் கல்வி மற்றும் சோலார் விளக்கு வழங்குவது உள்பட பல நல்ல  செயல் திட்டங்களை தொடங்கி நடத்தி வருகின்றனர்.இந்த அறக்கட்டளையின் புதி்ய கட்டிட அலுவலகம் திறப்பு விழா நிகழ்ச்சி  அப்துல்கலாம் வசித்து வந்த வீட்டின் அருகே நேற்று நடைபெற்றது.இந்த அலுவலக திறப்பு நிகழ்ச்சியில் அப்துல்கலாம் அண்ணன் முகமது முத்து மீரான் மரைக்காயர் தலைமை வகித்தார். அறக்கட்டளையின் செயளாலர் ஜெயினுலாபுதீன் வரவேற்புரையாற்றினார்.  ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் முன்னிலை வகித்து அலுவலகத்தை திறந்து வைத்தார்.ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி கார்த்திக்கேயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறு குறித்து சிறைப்புரையாற்றினார்.நிகழ்க்கு சிறப்பு விருந்தினர்களாக ராமநாதபுரம் வழக்கறிஞர் ரவிச்சந்திரராமவன்னி,மருத்துவர் ஜோசப்பராஜன்,ராமேசுவரம் ரோட்டரிசங்க தலைவர் கருப்பையா,நல்லாசிரியர் சேவியர் ராஜப்பா ஆகியோர்கள் கலந்துகொண்டனர், நிகழ்ச்சியில் டெல்லியில் வசித்து வந்தபோது அப்துல்கலாம் பயன்படுத்திய பொருள்கள்,வாங்கிய கிப்ட் பொருள்கள்,எழுதிய புத்தகங்களை பார்வைக்கு வைக்கப்பட்ட அறையை  சிறப்பு விருந்தினர்களும், பொதுமக்கள் பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு அறக்கட்டளையின் நிர்வாகிகள் நசிமாமரைக்காயர்,நாகூர்ரோஜா,சேக்தாவூத் ஆகியோர்கள் பொன்னாடை வழங்கினார்கள்.நிகழ்ச்சியில்  ராமேசுவரம் ஜமாத் நிர்வாகிகளும்,சமூக ஆர்வாளர்களும் பொதுமக்களும்  கலந்துகொண்டனர்.நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் நிர்வாகி அப்துல்கலாம் பேரன் சேக்சலீம் நன்றி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து