முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 11 பேர் பலி

சனிக்கிழமை, 1 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பரிதாபமாக பலியாகினர்.

அமெரிக்காவின் தென்பகுதியில் அமைந்துள்ளது விர்ஜினியா மாகாணம். இங்குள்ள விர்ஜினியா பீச் பிரபலமானது. அங்குள்ள ஒரு கட்டிட வளாகத்திற்குள் திடீரென துப்பாக்கியோடு நுழைந்த மர்ம நபர், அங்கிருந்தவர்களை கண்மூடித்தனமாக சுட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியாகினர். 6 பேர் காயம் அடைந்தனர் என போலீசார் தெரிவித்தனர். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் தாக்குதல் நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர் என்ன காரணத்துக்காக நடத்தினார் என்ற தகவல் வெளியாகவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து