முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போட்டி: போரிஸ் ஜான்சனுக்கு அமெரிக்கா ஆதரவு

சனிக்கிழமை, 1 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதில் (பிரெக்ஸிட்) இழுபறி நீடித்து வருவதன் எதிரொலியாக, தனது பதவியை ராஜினாமா செய்வதாக பிரதமர் தெரசா மே அறிவித்தார். இந்த நிலையில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் பதவியை ஏற்பதற்கு இதுவரை 8 எம்.பி.க்கள் முன் வந்துள்ளனர். அவர்களில், பிரெக்ஸிட்டுக்கு ஆதரவான பிரசாரத்தை முன்னின்று நடத்திய வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் போரிஸ் ஜான்ஸன் அடுத்த பிரதமர் ஆவதற்கான வாய்ப்பு அதிகமிருப்பதாக கூறப்படுகிறது. எனினும், தற்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெரிமி ஹன்ட், சர்வதேச மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் ரோரி ஸ்டூவர்ட், சுகாதாரத்துறை அமைச்சர் மாத்யு ஹான்காக், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மைக்கேல் கோவ், பிரெக்ஸிட் விவகார முன்னாள் அமைச்சர் டோமினிக் ராப், ஓய்வூதியத்துறை முன்னாள் அமைச்சர் எஸ்தெர் மெக்வி, நாடாளுமன்றத்துக்கான முன்னாள் அரசுப்பிரதிநிதி ஆண்ட்ரியா லெட்ஸம் உள்ளிட்ட மேலும் 7 பேர் பிரதமர் பதவிக்கு போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளனர். மொத்தம் 12 பேர் போட்டியாளர்களாக உள்ளனர். தெரசா மே பதவி விலகலுக்குப் பிறகு தொடங்கவிருக்கும் கன்சர்வேடிவ் கட்சிக் கூட்டத்தில் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.

இந்த நிலையில் போரிஸ் ஜான்ஸன் சிறந்த தலைவர் என அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழ்ந்து பேசி உள்ளார். இதனால் அவருக்கு அமெரிக்க ஆதரவு இருக்கிறது என நம்பப்படுகிறது. மேலும் அவர் கூறும் போது, போரிஸ் ஜான்சன் கன்சர்வேடிவ் கட்சி தலைமைக்கு ஒரு சிறந்த தேர்வு என்று கூறினார். போரிஸ் தனது பணியை திறம்பட செய்வார். மேலும் மற்ற வேட்பாளர்கள் குறித்து கூறும் போது, நான் யாருக்கு என்று உதவ முடியும்? என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து