முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். தூதர்களின் சலுகைகளை பறித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

சனிக்கிழமை, 1 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதர்கள், அதிகாரிகள், பழங்குடியினர் பகுதி மற்றும் கராச்சியை பார்வையிட அந்நாட்டு அரசு தடை விதித்தது. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மே மாதத்தில் தனது நாட்டில் பணியாற்றும் பாகிஸ்தான் தூதர்கள், அதிகாரிகளுக்கு அமெரிக்க அரசு பல்வேறு பயண கட்டுப்பாடுகளை விதித்தது. அமெரிக்காவில் பாகிஸ்தான் தூதரகத்தில் இருக்கும் அதிகாரிகள் தங்களின் பணியிடத்தில் இருந்து 40 கி.மீ. தொலைவுக்கு மேல் செல்லக் கூடாது என தடை விதித்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் தூதர்கள், அதிகாரிகளுக்கு தனது நாட்டில் வழங்கப்பட்டு வந்த சிறப்பு வரி விலக்கை அமெரிக்க அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. கடந்த 15-ம் தேதி சிறப்பு வரி விலக்கை திரும்ப பெறுவது குறித்து பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட அதிகாரிகள் தங்கள் சலுகைக்கான கார்ட்டை திரும்ப ஒப்படைத்துள்ளனர். இது குறித்து இஸ்லாமாபாத்தில் உள்ள வெளியுறவு துறை அமைச்சகம் எந்த பதிலும் அளிக்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து