முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளை பள்ளிகள் திறப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் 4 லட்சம் புத்தகங்கள் அனுப்பும் பணி தொடக்கம்

சனிக்கிழமை, 1 ஜூன் 2019      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - தமிழகத்தில் பள்ளிகள் நாளை (3ம் தேதி) திறக்கப்படவுள்ளதை முன்னிட்டு பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின் நாளை (3ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நாளை பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் 100 சதவீதம் சிறப்பாக செய்து வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் மாணவர்களை கொண்டு வந்து விடுவதற்காக பயன்படுத்தப்படும் பஸ்கள், வேன்கள் ஆகியவை மாவட்ட போக்குவரத்து அதிகாரி முன்னிலையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு சரியான முறையில் உள்ள வாகனங்களுக்கு சான்றிதழ் பெற்றபின்னர் அவைகளே இயக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பள்ளி பேருந்துகள் அனைத்தும் தர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கபட்டன. குறைபாடுகள் உள்ள வண்டிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு மீண்டும் பழுது ஞிக்கி ஆய்வுக்கு எடுத்து வர உத்தரவிடப்பட்டது. குறைபாடுகள் உள்ள வாகனங்கள் இயக்கப்படுவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டது.
கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் சுத்தம் செய்யப்பட்டு கொசுமருந்து அடிக்கும் பணி நடைபெற்றது. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி இந்தப்பணிகளை அந்தந்த உள்ளாட்சி நிர்வாகம் மேற்கொள்ளுமாறும் அதனை 100 சதவீதம் பூர்த்தி செய்து அறிக்கை அனுப்பவும் உத்தரவிட்டிருந்தனர். மேலும் பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாள் அன்றே மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இலவச பாடப்புத்தகங்கள் வழங்க அரசு கண்டிப்பான உத்தரவு வழங்கியிருந்தது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 4 லட்சம் பாடப்புத்தகங்கள் கடந்த 2 வாரங்களுக்கு முன்பே மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வந்து இறங்கின. இவை அனைத்தும் அந்தந்த தலைமை ஆசிரியர்கள் முன்னிலையில் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பள்ளிகள் திறக்கும் நாளன்று முதன் முதலில் பள்ளிக்கு வரும் குழந்தைகளை இனிப்புகள், மலர்கள் கொடுத்தும் வரவேற்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பை முன்னிட்டு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தேவையான புத்தகப்பை, வாட்டர் பாட்டில், காலனி ஆகியவை வாங்குவதற்கு கடைகளில் குவிந்தனர். இதனால் அந்த கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து