முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவில் தொழிற்சாலை விபத்தில் 82 பேர் காயம்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

மாஸ்கோ : ரஷ்யாவில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 82 பேர் காயம் அடைந்தனர்.

இது குறித்து ரஷ்யாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ரஷ்யா நாட்டின் தலைநகர் மாஸ்கோ அருகில் உள்ளது டிஸ்சின்ஸ்க் நகரம். இந்நகரத்தில் உள்ள தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தில் 38 ஊழியர்கள் மற்றும் 41 உள்ளூர் மக்கள் காயம்அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் தொழிற்சாலை விபத்து காரணமாக 180-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. தொழிற்சாலை விபத்து குறித்து ரஷ்யா நாட்டின் புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டு காலமாக ரஷ்ய நாட்டில் உள்ள டி.என்.டி தொழிற்சாலையில் விபத்து ஏற்படுவது இது மூன்றாவது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து