முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 6-ம் தேதி முதல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் - வானிலை மையம் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் : கேரளாவில் இன்னும் 4 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்.  இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதன்படி, கேரளாவில் மே மாதம் இறுதி வரை தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. இந்நிலையில் லட்சத்தீவு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியது. இதன் மூலம் இன்னும் 4 நாட்களில், அதாவது வருகிற 6-ம் தேதி முதல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் கேரளாவிற்கு அதிக மழை பொழிவு கிடைக்கும். இந்த ஆண்டு 97 சதவீதம் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரளாவில் 97 சதவீதம் மழை பெய்யும் என்று எதிர்பார்ப்பதாக கூறிய அதிகாரிகள் அது 8 சதவீதம் வரை கூடவோ அல்லது குறையவோ வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கினால் மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்யும். இதனால் தமிழகத்தின் தென்மாவட்டங்கள் பலன் பெறும். முல்லை பெரியாறு உள்ளிட்ட அணைகள், குமரி மாவட்டத்தின் நீர் ஆதாரங்கள் பலன் பெறும். குமரி மாவட்டத்தில் நேற்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. நாகர்கோவில், தோவாளை, அஞ்சுகிராமம், ஆரல்வாய் மொழி பகுதிகளில் சாரல் மழை பெய்தது. குமரி மேற்கு மாவட்டத்திலும், மலையோர கிராமங்களிலும் நேற்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்தபடி இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து