முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகின் அதிவெப்பமான 15 இடங்களின் பட்டியலில் 10 இந்திய நகரங்கள்

திங்கட்கிழமை, 3 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : உலகின் அதிவெப்பமான 15 இடங்களின் பட்டியலில் 10 இந்திய நகரங்கள் இடம் பிடித்து உள்ளன. 

கோடை வெயில் கொளுத்தும் நிலையில், இந்தியாவில் மூன்றில் இரண்டு பங்கு பகுதிகள் வெப்பத்தின் பிடியில் உள்ளன. சிம்லா, நைனிடால், ஸ்ரீநகர் போன்ற குளிர் பிரதேசங்களில் கூட இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் நேற்று அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவிய வெப்பநிலையின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட, உலகின் அதிவெப்பமான 15 இடங்களின் பட்டியலில் இந்தியாவின் 10 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

முறையே 48.9 மற்றும் 48.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவிய ராஜஸ்தானின் சுரு    மற்றும் ஸ்ரீகங்காநகர் ஆகிய இடங்கள் முதலிரண்டு இடங்களை பிடித்துள்ளன.

இதற்கடுத்த இடத்தில் 48 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவிய ஜாக்கோபாபாத் (பாகிஸ்தான்) உள்ளது. 47.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவிய உத்தர பிரதேசத்தின் பண்டா , 47.2 டிகிரி செல்சியஸ் நிலவிய அரியானாவின் நர்நுவல் ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இந்த ஆய்வு நாடு முழுவதும் 395 வானிலை மையங்களின் தரவை அடிப்படையாகக் கொண்டது. அதிகபட்ச, குறைந்தபட்ச மற்றும் தினசரி சராசரி வெப்பநிலை ஆய்வுக்கு கோடை, பருவ மற்றும் குளிர்கால மாதங்களில் நிலவும் காலநிலைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு தொகுக்கப்பட்டது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து