முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது எப்படி? அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

திங்கட்கிழமை, 3 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : வரும் உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பது குறித்து அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக் கூட்டம்...

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை நடத்தினார். நேற்று காலை 10 மணிக்குத் தொடங்கிய இந்தக் கூட்டத்தில் கட்சியின் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் பங்கு பெற்றனர். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் குறித்தும், வரப் போகும் உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

எதிர்கொள்வது எப்படி?

இதேபோல் சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தால் அதை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கு பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து