முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசின் போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டங்கள் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

திங்கட்கிழமை, 3 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : மத்திய அரசின் போட்டித்தேர்வுகளை மாணவர்கள் எளிதில் எதிர்கொள்ளும் வகையில் தமிழக அரசின் பாடத்திட்டங்கள் அமைந்திருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

2 ஆண்டுகளில்...

வரும் கல்வியாண்டுக்கான 2, 3, 4,5, 7, 8, 10, 12 வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிமுகப்படுத்தினார். அதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர்செங்கோட்டையன் கூறியதாவது:-

சென்ற ஆண்டு 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த ஆண்டு 2, 3, 4, 5, 7, 8, 10 மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டங்கள் அறிமுகப்பட்டுள்ளன. மத்திய அரசினால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளை நம்முடைய மாணவர்கள் அறிவுத்திறனோடு எதிர்கொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மத்திய அரசினால் உருவாக்கப்படும் பாடத்திட்டங்கள் கடந்த காலத்தில் 3 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டன. மூன்று ஆண்டுக் காலத்தில் முடிக்கப்பட்ட பாடத்திட்டங்கள் 2 ஆண்டுகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒத்துழைப்பு...

புதிய பாடத் திட்டங்களை மாணவர்களுக்கு கற்பிக்க கிட்டதட்ட 220 நாட்கள் தேவை. இப்போது 210 நாட்கள் பள்ளித்திறப்பு நாட்களாக உருவாக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு 198 நாட்கள் பள்ளி வேலை நாட்களாக இருந்துள்ளது. எனவே கோடைக்கால வெப்பத்தை பொருட்படுத்தாமல் மாணவர்களின் நலன் கருதி இன்றே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் மாணவர்களும், ஆசிரியர்களும் கற்றல் கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டு அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து