முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் நகராட்சிக்கு முறையாக வரி செலுத்திடாமல் ரூ.40லட்சம் வருவாய் இழப்பை ஏற்படுத்திய ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றிடும் பணிகள் தீவிரம்:

திங்கட்கிழமை, 3 ஜூன் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சிக்கு முறையாக வரி செலுத்திடாமல் கடந்த 15 ஆண்டுகளில் ரூ.40லட்சம் வருவாய் இழப்பை ஏற்படுத்திய ஆக்கிரமிப்பு வணிக வளாக கட்டிடங்களை அகற்றிடும் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முறையான அனுமதி இன்றி ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களால் அதிகளவு வரி இழப்பு ஏற்பட்டு வருவதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.இதையடுத்து முறையான அனுமதியின்றி ஆக்கிமித்து கட்டப்பட்ட கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு நகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு முறையான அனுமதி பெற்று வரிகளை செலுத்திடுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.இந்நிலையில் திருமங்கலம் நகர் காவல் நிலையம் எதிரில் புறநகர் பேருந்து நிறுத்தம் பகுதியில் முறையான அனுமதியின்றி ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வணிக வளாக கட்டிடத்தினால் கடந்த 15 ஆண்டுகளாக திருமங்கலம் நகராட்சிக்கு சுமார் ரூ.40லட்சம் வரை வருவாய் இழப்பு எற்பட்டு வந்துள்ளது.இதுபற்றி அந்த வணிக வளாக நிர்வாகிக்கு நகராட்சி சார்பில் வரி பாக்கியை உடனடியாக செலுத்தி மேல் நடவடிக்கையை தவிர்த்திடுமாறும் அறிவுறுத்தப்பட்டது.இதனை அந்த வணிக வளாக நிர்வாகி கண்டுகொள்ளவில்லை.
இதனை தொடர்ந்து கடந்த 15ஆண்டுகளாக ரூ.40லட்சம் வரை நகராட்சிக்கு வருவாய் இழப்பினை ஏற்படுத்தி வந்த ஆக்கிரமிப்பு வணிக வளாக கட்டிடங்களை முற்றிலுமாக அகற்றிடுமாறு திருமங்கலம் நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி நேற்று திருமங்கலம் நகராட்சியின் நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வரி செலுத்திடாமல் ஏமாற்றிய வணிக வளாக கட்டிடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றிடும் பணிகளில் ஈடுபட்டனர்.அப்போது அங்கே ஆக்கிரமித்திருந்த தனியார் பேக்கரியின் பொருட்கள் அனைத்தையும் அதிகாரிகள் கைப்பற்றி வேனில் ஏற்றி நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.போதிய போலீஸ் பாதுகாப்பு கிடைக்காததால் மீண்டும் மற்றொரு நாளில் ஜே.சி.பி இயந்திரங்களைக் கொண்டு வரிசெலுத்திடாத ஆக்கிரமிப்பு வணிக வளாக கட்டிடங்களை இடித்து தரைமட்டமாக்கிட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.நகராட்சி நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கை திருமங்கலம் நகர மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து