முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர்நாத் யாத்திரை: அமித்ஷாவுக்கு சவால்

திங்கட்கிழமை, 3 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

புதுடில்லி,  அமர்நாத் யாத்திரையை எந்த அசம்பாவிதமும் இல்லாமல் முடித்துக் காட்டுவதே புதிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முன் உள்ள சவாலாகும்.

ஆண்டுதோறும் அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது வழக்கம். இந்த யாத்திரையை வெற்றிகரமாக முடிப்பதே மத்திய அரசுக்கு பெரிய தலைவலி.தெற்கு காஷ்மீரில் அமைந்துள்ள அமர்நாத் குகை பனி லிங்கத்தை தரிசனம் செய்ய இந்த ஆண்டு 1.10 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.

வரும் ஜூலை 1ம் தேதி துவங்கும் இந்த யாத்திரை 46 நாட்கள் நடக்கும். ஆக.15ம் தேதி முடியும். அனுமதி இல்லாமல் யாத்திரை செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. இதற்கான பதிவு பஞ்சாப் நேஷனல் வங்கி, ஜம்மு காஷ்மீர் வங்கி, யெஸ் வங்கி கிளைகளில் நடக்கிறது. லோக்சபா தேர்தலுக்காக காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு அனுப்பப்பட்ட 3 ஆயிரம் துணை ராணுவ படையினர், அமர்நாத் யாத்திரை முடியும் வரை அங்கேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர, இந்தோ திபெத் ராணுவத்தை சேர்ந்த கமாண்டோக்களும் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.காஷ்மீரில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அம்மாநில கவர்னர் சத்யபால் மாலிக், அமித்ஷாவை சந்தித்து விளக்கினார். ஏற்கனவே புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதால், யாத்திரையின் போது அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது என்பதில் அமித்ஷா குறியாக இருக்கிறார். உள்துறை அமைச்சர் என்ற முறையில் தனக்கு இது முதல் சோதனை என்று அமித்ஷா நினைக்கிறார்'' என்றார் ஒரு அதிகாரி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து