முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சரவையில் பங்கேற்க அழைப்பு விடுத்தால் அ.தி.மு.க. முடிவு எடுக்கும்: அமைச்சர் ஜெயகுமார் அறிவிப்பு

திங்கட்கிழமை, 3 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

சென்னை, மத்திய அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தால் அது பற்றி அ.தி.மு.க. முடிவெடுக்கும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

தே.மு.தி.க. சார்பில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் ஜெயகுமார், நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நாங்கள் தி.மு.க. போல பதவிக்காக வெறிப்பிடித்து அலைபவர்கள் அல்லர். நானும் முதல்வரும் ஊடகங்களில், சொன்னது போல மத்திய அமைச்சரவையில் பங்கேற்க வேண்டுமென மத்திய அரசு முன்வரும் பட்சத்தில் அது அ.தி.மு.க. தலைமை முடிவெடுக்கும். எங்களை பொறுத்தவரை தேர்தலுக்கு முன்பு இங்கேயும் அங்கேயும் பேசி இரட்டைக்குதிரையில் சவாரி செய்பவர்கள் நாங்கள் இல்லை. மத்திய அரசு அழைப்பு விடுக்கும்பட்சத்தில் அதில் பங்கேற்பது குறித்து கட்சி தான் முடிவு செய்யும். இதில் அனுமானத்திற்கெல்லாம் இடமில்லை.

இந்த நிலையில் இது பற்றி தமிழகத்தில் திரைக்கதை வசனம் எழுதி வருகிறார்கள். அவர்கள் எழுதும் கற்பனைக் கதையெல்லாம் உண்மையில்லை. இதுவரை மத்திய அரசிடமிருந்து அழைப்பு வரவில்லை. நாளை வரலாம், நாளை மறுநாள் வரலாம். புறக்கணிப்பு என்பது நிச்சயம் கிடையாது. நீங்கள் சொல்லும் நிலையில் மத்திய அரசுக்கு அறுதிப்பெரும்பான்மை இல்லாவிட்டால் வரலாம். ஆனால் அவர்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து