முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வு முடிவு இன்று வெளியீடு: இணையதளத்தில் பார்க்கலாம்

செவ்வாய்க்கிழமை, 4 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

சென்னை, நீட் தேர்வு முடிவு இன்று வெளியாகிறது. தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் இந்த தேர்வு முடிவுகளை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட்) முடிவின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இந்த தேர்வு கடந்த மாதம் (மே) 5-ம் தேதியும், 20-ம் தேதியும் நடைபெற்றது. இந்த முறை நீட் தேர்வுக்கான மையங்கள் தமிழகத்திலேயே அமைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் இன்று புதன்கிழமை வெளியிடப்பட உள்ளது. தேசிய தேர்வு முகமையின் இணையதளத்திலும் தேர்வு முடிவுகளை தேர்வர்கள் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து