முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் நரேந்திர மோடிக்கு போலந்து சிறுமி எழுதிய நெகிழ்ச்சி கடிதம்

செவ்வாய்க்கிழமை, 4 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

வார்ஷா, போலந்து நாட்டைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் தனது விருப்பத்தினை உருக்கமான கடிதமாக பிரதமர் மோடிக்கு எழுதியுள்ளார்.

போலந்து நாட்டைச் சேர்ந்தவர் அலிக்ஜா வனாட்கோ. இவர் தனது தாய் மார்த்தாவுடன் கோவாவில் தங்கி பள்ளியில் படித்து வந்துள்ளார். விசா காலம் முடிந்த பின்னரும் தங்கியதாக கூறி தாய் மார்த்தா நாடு கடத்தப்பட்டார். இதையடுத்து சிறுமியை அழைத்துச் செல்வதற்காக தாய்க்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி அலிக்ஜா தாயுடன் சொந்தநாடு திரும்பினார்.

இந்த நிலையில் மீண்டும் பிரதமராக மோடி பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு வாழ்த்துக்களை கூறி கடிதம் ஒன்றை மிகவும் உருக்கமாக எழுதியுள்ளார் அலிக்ஜா. இந்த கடிதத்தில், நான் கோவாவை மிகவும் நேசிக்கிறேன். அங்குள்ள விலங்கு மீட்பு மையத்தில் இணைந்து தன்னார்வ தொண்டு செய்து வந்தேன். அதனை நான் இழந்து விட்டேன் என அந்த சிறுமி மிக உருக்கமாக பல தகவல்களை எழுதியுள்ளார்.  மேலும் தாயுடன் அங்குள்ள கேதர்நாத் கோவிலுக்கு சென்று வந்த அனுபவம் குறித்தும், இருவரின் விசா கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருப்பதால் அதனை நீக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு மட்டுமின்றி புதிய வெளியுறவுத்துறை மந்திரியாக பொறுப்பேற்ற ஜெய்சங்கருக்கும் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தினை அவரது தாய் மார்த்தா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மழலை கையெழுத்தில் அந்த கடிதம் படிப்பவர்களை நெகிழச் செய்துள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து