முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் தோல்வி எதிரொலி: உ.பி.யில் சமாஜ்வாடியுடன் பகுஜன் கூட்டணி முறிவு

செவ்வாய்க்கிழமை, 4 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

லக்னோ, உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.  பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி, அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 15 இடங்களில் மட்டுமே இந்த கூட்டணி வெற்றி பெற்றது. இதனையடுத்து பகுஜன் சமாஜ் - சமாஜ்வாடி இடையிலான கூட்டணியில் முறிவு ஏற்பட்டதாக செய்திகள் பரவின.

இந்நிலையில் சமாஜ்வாடி கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக மாயாவதி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், உ.பி.யில் எதிர்வரும் 11 தொகுதி இடைதேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும். சமாஜ்வாடி கட்சியுடனான கூட்டணி முறிவு நிரந்தரமானது அல்ல. எதிர்காலத்தில் தேவைப்பட்டால் மீண்டும் இணைவோம் என்று அவர் அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து