முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிபா வைரஸ் குறித்து பயப்பட தேவையில்லை! அனைத்து உதவிகளையும் செய்ய தயார்: மத்திய அரசு

செவ்வாய்க்கிழமை, 4 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, நிபா வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை என்றும் மத்திய அரசு சாத்தியமான அனைத்து உதவிகளையும் அளிப்போம் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு பரவியதில் 17 பேர் உயிரிழந்தனர். நிபா வைரஸ் நோய்  வவ்வால்கள் மூலம் பரவுகிறது. அப்போது சுகாதாரத்துறை மேற்கொண்ட தீவிர தடுப்பு நடவடிக்கையால் வைரஸ் காய்ச்சல் கடந்த ஆண்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில், கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில் வைரஸ் பாதிப்பு அறிகுறிகளுடன் 23 வயது இளைஞர் ஒருவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் வெளியான முடிவுகளின் படி, அவருக்கு நிபா காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவ தொடங்கியதை தொடர்ந்து மத்திய அரசு நேற்று அவசர ஆலோசனை நடத்தியது. டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் அதிகாரிகளுடன் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆலோசனை நடத்தினார். பின்னர் ஹர்ஷ்வர்தன் கூறுகையில், மத்திய அரசு சாத்தியமான அனைத்து உதவிகளையும் அளிப்போம் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சரிடம் நான் உறுதி அளித்தேன். எனவே, அச்சப்பட தேவையில்லை. கேரளாவுக்கு 6 மருத்துவர்கள் அடங்கிய நிபுணர் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து