முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தானில் தண்ணீர் தட்டுப்பாடு: நீர் திருட்டை தவிர்க்க கேன்களுக்கு பூட்டு போட்டு பாதுகாக்கும் மக்கள்

செவ்வாய்க்கிழமை, 4 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

பில்வாரா, ராஜஸ்தானில் உள்ள பரஸ்ரம்புரா கிராமத்தில் நீர் திருட்டை தடுக்க மக்கள் தண்ணீர் கேன்களுக்கு பூட்டு போட்டு பாதுகாத்து வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஹர்தா பஞ்சாயத்துக்கு உட்பட்ட பரஸ்ரம்புரா கிராமத்து மக்கள் தண்ணீரை பூட்டு போட்டு பாதுகாத்து வருகின்றனர். தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் அப்பகுதியில் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே நீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நீரை அப்பகுதி மக்கள் கேன்களில் சேகரித்து எஞ்சியுள்ள 10 நாட்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் கேனில் நிரப்பப்பட்டிருக்கும் நீரை சிலர் திருடிச் செல்லும் அவலமும் ஏற்பட்டுள்ளது. ஆதலால் தண்ணீர் கேன்களுக்கு பூட்டு போட்டு நீரை பாதுகாத்து வருகின்றனர்.

தங்கம், வெள்ளியை விட தண்ணீர் அதிக விலை மதிப்புள்ள பொருளாக உள்ளது என்பதால் அதனை பத்திரமாக பூட்டி பாதுகாத்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். தண்ணீர் பஞ்சம் குறித்து அம்மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர பட் கூறுகையில், பரஸ்ரம்புரா கிராமத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாடு விரைவில் போக்கப்படும். தற்போது வாரத்திற்கு ஒருமுறை அப்பகுதியில் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. நாளடைவில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இடைவெளியில் தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து