முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 8-ம் தேதி இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி

செவ்வாய்க்கிழமை, 4 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, பிரதமர் நரேந்திர மோடி வரும் 8-ம் தேதி மாலத்தீவுக்கும் அடுத்த நாள் இலங்கைக்கும் பயணம் மேற்கொள்கிறார்.

மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார். இதற்கு பின் முதல் முறையாக வரும் 8-ம் தேதி வெளிநாட்டு சுற்றுப்பயணம் செல்கிறார். முதலில் தெற்காசிய நாடான மாலத்தீவுக்கு பிரதமர் செல்கிறார். மாலத்தீவு அதிபர் இப்ராகிம் சாலிஹ் அழைப்பை ஏற்று அவர் செல்கிறார். அங்கு இரு நாட்டு உறவு பொருளாதார வளர்ச்சி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அந்த நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சு நடத்துகிறார். இதைத் தொடர்ந்து வரும் 9-ம் தேதி நம் அண்டை நாடான இலங்கைக்கு பிரதமர் செல்கிறார். சமீபத்தில் டெல்லி வந்திருந்த இலங்கை அதிபர் சிறிசேன தங்கள் நாட்டுக்கு வரும்படி பிரதமருக்கு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து