முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுடெல்லியில் வரும் 15-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் 'நிதி ஆயோக்' குழுக்கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 4 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, புதுடெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் வரும் 15-ம் தேதி நிதி ஆயோக் ஆட்சிமன்றக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திட்டக்குழு கலைப்பு

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த முறை பொறுப்பேற்றதும், நாட்டின் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்களை வரையறுக்கும் மத்திய திட்டக்குழு கலைக்கப்பட்டு அதற்கு மாற்றாக நிதி ஆயோக் என்னும் பெயரில் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக பிரதமர் செயல்பட்டு வருகிறார்.

முதல்வர்களுக்கு அழைப்பு

இந்த நிலையில், நிதி ஆயோக் அமைப்பின் ஐந்தாவது ஆட்சிமன்றக் குழு கூட்டம் டெல்லியில் வரும் 15-ம் தேதி நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி அனைத்து மாநில முதல்வர்கள், கவர்னர்கள், துணைநிலை கவர்னர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்ற பின் நடைபெறும் முதல் கூட்டம் இது ஆகும். இக்கூட்டத்தில், மாநில அரசுகளின் கருத்துக்கள், கொள்கை முடிவுகள், வளர்ச்சித் திட்டங்கள், நீர் மேலாண்மை, விவசாயம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படுகின்றன.

முதல்வர் கலந்து...

காங்கிரஸ் கட்சி பதவியில் இருந்த போது திட்டக்குழு என்ற அமைப்பு செயல்பட்டு வந்தது. இந்த திட்டக்குழுவானது மாநில முதல்வர்களுடன் கலந்தாலோசித்த பிறகு அந்தந்த மாநிலங்களுக்கு தேவையான வளர்ச்சி திட்ட நிதிகளை ஒதுக்கீடு செய்வது வழக்கம். ஆனால் கடந்த முறை மோடி பதவியேற்ற பிறகு இந்த அமைப்பே கலைக்கப்பட்டு நிதி ஆயோக் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. தற்போது இந்த அமைப்பு மாநில முதல்வர்களுடன் கலந்து ஆலோசித்து அந்த மாநிலங்களுக்கு தேவையான நிதி உதவிகளை செய்து வருகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதால் தமிழக அரசின் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து