முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யோகா பயிற்சியை ஏற்படுத்தி கொள்ளுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

புதன்கிழமை, 5 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாக யோகா பயிற்சியை ஏற்படுத்தி கொள்ளுங்கள் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சர்வதேச யோகா தினம்

பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு ஐ.நா. சபைக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதை ஏற்று ஐ.நா. சபை ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. அதன்படி 2015-ம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வருகிற 21-ம் தேதி (வெள்ளிக்கிழமை) 5-வது ஆண்டு சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது.

21-ல் மோடி பங்கேற்பு

பிரதமர் மோடி பதவி ஏற்ற பிறகு இந்த விழாவில்தான் பங்கேற்க உள்ளார். டெல்லி, சிம்லா, மைசூர், ஆமதாபாத், ராஞ்சி ஆகிய 5 நகரங்களில் ஏதாவது ஒரு நகரில் சர்வதேச யோகா தினத்தை கொண்டாட முடிவு செய்யப்பட்டது. தீவிர ஆய்வுக்கு பிறகு ராஞ்சி நகரில் சர்வதேச யோகா தினத்தை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி 21- ம் தேதி சர்வதேச யோகா தின விழாவில் கலந்து கொண்டு யோகா பயிற்சிகளை செய்ய இருக்கிறார். இதை முன்னிட்டு அவர் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு சிறிய வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

முன்மாதிரியாக இருங்கள்

யோகா பயிற்சியை ஒவ்வொருவரும் தினமும் செய்ய வேண்டும். யோகா பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாதவை. யோகா பயிற்சியை உங்கள் வாழ்வின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக ஏற்படுத்தி கொள்ளுங்கள். அது உங்களுக்கு நன்மையை தரும். வருகிற 21-ம் தேதி நாம் அனைவரும் சர்வதேச யோகா தினத்தில் பங்கேற்போம். நீங்களும் யோகா செய்யுங்கள். மற்றவர்களுக்கும் யோகா பயிற்சி செய்ய முன்மாதிரியாக இருங்கள். இவ்வாறு மோடி அதில் குறிப்பிட்டுள்ளார். மோடி வெளியிட்டுள்ள வீடியோவில் யோகா சனங்கள் இடம் பெற்றுள்ளன. கடந்த ஆண்டும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி சிறப்பு வீடியோ தொகுப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து