முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விண்வெளிக்கு பயணமாகும் 2 விண்வெளி வீரர்கள் தேர்வு

வியாழக்கிழமை, 6 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் விண்வெளிக்கு பயணமாகும் 2 விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்காக, க்ரூ டிராகன் விண்கலத்தை நாசாவுடன் இணைந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் இந்த விண்கலம் வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்ட நிலையில், ஏப்ரல் மாதம் கேப் கெனவெரலல் உள்ள விமானப்படை தளத்தில் இதன் என்ஜின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது அதில் இருந்து ஆரஞ்சு வண்ணப்புகை எழுந்ததாகவும், டிராகன் ஒழுங்கற்று இயங்கியதாகவும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது.

அதன் பின்னர், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய வகையில் விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பயணிக்க விண்வெளி வீரர்களான பாப் பென்கென், டக்ளஸ் ஹர்லி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டில் விண்கலம் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து