முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தையின் கைவிரலை தவறுதலாக துண்டித்த நர்ஸ் - குஜராத் மருத்துவமனையில் நடந்த கொடூரம்

வியாழக்கிழமை, 6 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

ஆமதாபாத் : குஜராத் மருத்துவமனையில் குழந்தையின் கைவிரலை நர்ஸ் துண்டித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்ட 5 மாத குழந்தை ஒன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. அங்கு மருந்து ஏற்றுவதற்காக குழந்தையின் கையில் கட்டு போடப்பட்டது. பின்னர் அதை நர்ஸ் ஒருவர் பிரித்தார். அப்போது குழந்தையின் கட்டை விரலை அவர் தவறுதலாக துண்டித்து விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகம் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் விரலை மீண்டும் சேர்த்து விட்டது. எனினும் அந்த அறுவை சிகிச்சை வெற்றி பெறுமா? என்பது குறித்து உறுதியாக கூற முடியாது என டாக்டர்கள் தெரிவித்து விட்டனர். எனவே அந்த குழந்தையை வேறு நவீன மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறும் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய், போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக அந்த நர்ஸ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் ஆமதாபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து