முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 குழுக்களில் மட்டுமே இடம்பெற்ற ராஜ்நாத் சிங்

வியாழக்கிழமை, 6 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : பிரதமர் மோடி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 8 அமைச்சரவை குழுக்களில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2 குழுக்களில் மட்டுமே இடம்பெற்றுள்ளார்.

பிரதமர் மோடி அறிவித்த 8 அமைச்சரவை குழுக்களில் உள்துறை அமைச்சராக உள்ள அமித்ஷா, அனைத்து குழுக்களிலும் இடம்பெற்றுள்ளார். பிரதமர் மோடி 6 குழுக்களில் மட்டுமே இடம்பெற்றுள்ளார். அதே சமயம் ராஜ்நாத் சிங், வணிக விவகாரத்துறை மற்றும் பாதுகாப்பு தொடர்பான 2 குழுக்களில் மட்டுமே இடம்பெற்றுள்ளார். அரசியல் விவகாரங்கள் தொடர்பாக அமைச்சரவை குழுவில் அவருக்கு இடம் அளிக்கப்படவில்லை.

மத்திய அரசில் பிரதமருக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் உள்ள ராஜ்நாத் சிங், அமைச்சரவை குழுக்களில் 2-ல் மட்டுமே இடம்பெற்றுள்ளதால், அவர் ஓரங்கட்டப்படுவதாக பல தரப்பிலும் பேசப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து