முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லண்டன் பேருந்துகளில் பிரதமர் மோடியை வரவேற்று பேனர்கள் - வலைதளங்களில் வைரல்

வியாழக்கிழமை, 6 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

லண்டன் : லண்டன் நகர பேருந்துகளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க விளம்பர படங்கள் பொருத்தப்பட்டுள்ளது. 

லண்டன் நகர பேருந்துகளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க விளம்பர படங்கள் ஒட்டப்பட்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. புகைப்படங்கள் எடுக்கப்பட்ட காலம் பற்றி எவ்வித தகவலும் இடம்பெறவில்லை.

விளபர படங்கள் இடம்பெற்றிருக்கும் சமூக வலைதள பதிவுகளில், வரவேற்கிறோம் மோடி ஜி எனும் வாசகமும், இத்தகைய மரியாதையும் கவுரவமும் எந்த நாட்டு பிரதமருக்கும் வழங்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. பேருந்துகளில் இருக்கும் விளம்பரங்களில், வரவேற்கிறோம் மோடி ஜி. முதல் மற்றும் இரண்டாவது உலக போரில் இந்தியாவின் பங்களிப்பை நாங்கள் நினைவில் கொள்கிறோம் என்ற வாசகம் இடம்பெற்றிருக்கிறது. இந்த தகவல் வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கடந்த  2015-ம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி லண்டன் சென்றிருந்த போது, அங்கு வசிக்கும் இந்தியர்கள் மோடி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் சிறப்பு பேருந்தை இயக்கினர். இந்த பேருந்துகள் மத்திய லண்டனை சுற்றியிருக்கும் புகழ் பெற்ற இடங்களுக்கு ஒரு மாதம் சுற்றிவரும் படி திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து