முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியுடன் மத்தியபிரதேச முதல்வர் கமல்நாத் திடீர் சந்திப்பு

வியாழக்கிழமை, 6 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

 புது டெல்லி : டெல்லியில்  பிரதமர் மோடியை மத்திய பிரதேச மாநில முதல்வர் கமல்நாத் திடீரென சந்தித்துள்ளார்.  

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், மத்திய பிரதேச மாநிலத்தின் முதல் மந்திரியுமான கமல்நாத் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். 
இதற்கிடையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மத்தியபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற கமல்நாத் சரியாக செயல்படவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார். 

மேலும் மக்களவை தேர்தலில் பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கமல்நாத் மீது பா.ஜ.க.வினரும் கடும் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த நிலையில், நேற்று பிரதமர் மோடியை கமல்நாத் திடீரென சந்தித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து