முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை

வெள்ளிக்கிழமை, 7 ஜூன் 2019      அரசியல்
Image Unavailable

பெங்களூரு, கர்நாடக சட்டசபைக்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரும். அதனால் அனைவரும் தயாராக இருங்கள் என முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் பேசி உள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி. இவர், சட்டசபை தேர்தல் குறித்த அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகும் என்பதால் கட்சி தொண்டர்கள் தயாராக இருக்கும்படி பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை முதலில் கட்சி தொண்டர் சுனில் கவுடா என்பவர் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.

அந்த வீடியோவில் நிகில், நாம் இப்போதே பணிகளை துவக்க வேண்டும். எப்போது தேர்தல் வரும் என நமக்கு தெரியாது. அடுத்த மாதமா, அடுத்த ஆண்டா, 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு பிறகா என தெரியாது. எந்த நேரத்திலும் சட்டசபை தேர்தல் அறிவிப்பு வரும் என்பதால் மதசார்பற்ற ஜனதா தளம் தொண்டர்கள் இப்போதே தயாராக வேண்டியது அவசியம் என பேசி உள்ளார்.

அதே சமயம், அரசிற்கு எந்த அச்சுறுத்தலோ, பிரச்னையோ இல்லை. எனது தந்தை தலைமையிலான அரசு முழு ஆட்சி காலத்தையும் நிறைவு செய்யும். அரசில் என்ன நடக்கிறது என எங்களுக்கு தெரியும் எனவும் பேசி உள்ளார். மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவராக இருந்த விஸ்வநாத் பதவி விலகி சில நாட்களில் இந்த வீடியோ பரப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து