முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதே எனது முதல் கடமை தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார் பேட்டி

வெள்ளிக்கிழமை, 7 ஜூன் 2019      தேனி
Image Unavailable

தேனி - தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதே எனது முதல் கடமை என்று தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
 நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி பாராளுமன்ற தொகுதியில் கழக வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமார் மகத்தான வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து நேற்று தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டியில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் லோயர்கேம்பில் ஜான் பென்னிகுவிக் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியபோது, என்னை வெற்றி பெற செய்த தேனி பாராளுமன்ற தொகுதி மக்களுக்கு நான் நன்றி செலுத்த வேண்டும். அவர்களுடைய குறைகளை தீர்க்க வேண்டும். வாக்கு சேகரிக்க சென்றபோது பொதுமக்கள் என்னிடம் என்ன குறைகளை முன்வைத்தார்களோ அவற்றை முழுமையாக நிறைவேற்றுவதே எனது முதல் பணி என்றார். மேலும் போடி-மதுரை அகல ரயில்பாதை பணிகள் குறித்து இரயில்வே  அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு விரைந்து இப்பணியை முடித்திட நடவடிக்கை எடுப்பேன். தேனியில் குடிநீருக்காக உண்ணாவிரதம் இருந்து வரும் விவசாயிகளை சந்தித்து விரைவில் அவர்களின் குறைகளை தீர்க்க முயற்சி செய்வேன். ஈவிகேஎஸ் இளங்கோவன் உங்களை எம்.பியாக பதவி ஏற்க கூடாது என்றும் இடைகால தடை விதிக்க கோரி வழக்கு தொடர போவதாக தெரிவித்துள்ளது பற்றி கேட்டபோது, அவருக்கு மக்கள் என்ன தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள் என்றும், அவர் மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியின்போது மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், மாவட்ட துணை செயலாளர் முறுக்கோடை ராமர், மாவட்ட இணை செயலாளர் மஞ்சுளாமுருகன், மாவட்ட துணை செயலாளர் வசந்தாநாகராஜ்,  நகர செயலாளர்கள், போடி பழனிராஜ்,  கூடலூர் சோலைராஜ், தேனி கிருஷ்ணகுமார்,  சின்னமனூர் ராஜேந்திரன், கம்பம் ஜெகதீஷ், ஒன்றிய செயலாளர்கள் தேனி ஆர்.டி.கணேசன், போடி சற்குணம், பெரியகுளம் அன்னபிரகாஷ், ஆண்டிபட்டி லோகிராஜன், கடமலைமயிலை கொத்தளாமுத்து, கம்பம் இளையநம்பி, சின்னமனூர் விமலேஸ்வரன், உத்தமபாளையம் அழகுராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் பாண்டியராஜன், பாசறை மாவட்ட செயலாளர் நாராயணன், தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் பாலசந்திரன்,   பெரியகுளம் நகர துணை செயலாளர் அப்துல்சமது, பெரியகுளம் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் அன்பு, மற்றும் இளையராஜா, கோகுல்ராஜ், கவியரசன், கரிகாலன், கள்ளிப்பட்டி சிவக்குமார், காஜாமுயுனுதீன்,  கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து