வெள்ளை மாளிகையில் பட்டுப்போனது நட்பு மரம் - அமெரிக்கா - பிரான்ஸ் இணைந்து நட்டது

ஞாயிற்றுக்கிழமை, 9 ஜூன் 2019      உலகம்
whitehouse friendly tree 2019 06 09

வாஷிங்டன் : வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் டிரம்ப் - பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மேக்ரான் ஆகியோர் இணைந்து நட்ட நட்பு மரம் பட்டுப்போனது.

அமெரிக்கா - பிரான்ஸ் நாடுகளுக்கு இடையிலான 250 ஆண்டு கால நட்புறவை கொண்டாடும் வகையில் பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மேக்ரான் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வாஷிங்டன் நகருக்கு சென்றிருந்தார். அப்போது இருநாடுகளுக்கு இடையிலான வலிமையான நட்பை நினைவுகூரும் விதமாக வெள்ளை மாளிகையின் தெற்கு பகுதியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - எம்மானுவேல் மேக்ரான் ஆகியோர் ஒன்றாக இணைந்து ஒரு கருவாலி மரக்கன்றை நட்டனர்.  அமெரிக்கா - பிரான்ஸ் நட்பு மரம் என்று அழைக்கப்பட்ட இந்த மரம் நடுவிழா அப்போது உலக ஊடகங்களில் மிக முக்கிய செய்தியாக வெளியானது.

இந்நிலையில், இந்த நட்பு மரம் பட்டுப்போய் செத்து விட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு வெள்ளை மாளிகை அதிகாரிகளின் மிதமிஞ்சிய கட்டுப்பாடுதான் காரணம் என்றும் கூறப்படுகிறது. பிரான்ஸ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த மரக்கன்றினால் அதிபரின் வெள்ளை மாளிகை தோட்டத்தில் உள்ள மற்ற செடி வகைகளுக்கு எந்த பாதிப்பும் உண்டாகக் கூடாது என்ற நோக்கத்தில் நட்பு மரத்தின் மீது அதிகாரிகள் சில தெளிப்பான்களை தொடர்ந்து பயன்படுத்தியதால் அந்த மரம் இறந்து விட்டதாக சில செய்திகள் குறிப்பிடுகின்றன.

முதலாம் உலகப்போரின் போது பிரான்ஸ் நாட்டில் உயிர்நீத்த அமெரிக்க வீரர்களின் கல்லறை அமைந்துள்ள இடத்தில் இருந்து சுமார் 6 அடி உயரம் கொண்ட இந்த கருவாலி மரக்கன்று அமெரிக்காவுக்கு முன்னர் கொண்டு வரப்பட்டது. கடந்த ஆண்டில் இந்த மரக்கன்று நடப்பட்ட ஒரு வாரத்தில் காணாமல் போனதும், பின்னர், மிக உயரிய நினைவுப்பரிசு என்பதால் பாதுகாப்பாக வளர்ப்பதற்காக வேறு இடத்துக்கு நட்பு மரம் கொண்டு செல்லப்பட்டதாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து