இலங்கை குண்டு வெடிப்பு நடந்த சர்ச்சில் பிரதமர் மோடி அஞ்சலி

ஞாயிற்றுக்கிழமை, 9 ஜூன் 2019      உலகம்
pm modi tribute to SL Church 2019 06 09

கொழும்பு : இலங்கை தலைநகர் கொழும்புவில், சமீபத்தில் பயங்கரவாதிகளின் குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்த புனித அந்தோணியார் தேவாலயத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று அஞ்சலி செலுத்தினார்.

பிரதமர் நரேந்திரமோடி, அரசு முறைப்பயணமாக இலங்கை சென்றார். கொழும்பு விமான நிலையத்தில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பிரமதர் மோடியை நேரில் வரவேற்றார். அப்போது பிரதமர் மோடிக்கு சிவப்புகம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது. அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனாவும், உயரதிகாரிகளும் உற்சாகமுடன் மோடியை வரவேற்றனர்.

பின்னர், மோடி தலைநகர் கொழும்புவில், கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் திருநாள் அன்று, பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய புனித அந்தோணியார் தேவாலயத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் சென்றனர். குண்டுவெடிப்பில் இறந்தோருக்கு அங்கு அஞ்சலி செலுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து