சூடானில் உள்நாட்டுப்போர்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண போப் வேண்டுகோள்

திங்கட்கிழமை, 10 ஜூன் 2019      உலகம்
Pope Francis 2019 05 27

வாட்டிகன் : சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டுப்போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சூடான் நாட்டில் அதிபருக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ராணுவப் புரட்சி காரணமாக ஆட்சி கவிழ்க்கப்பட்டு அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். புதிய அதிபராக பதவியேற்ற ராணுவ தளபதியும், மக்களின் எதிர்ப்பு காரணமாக பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் சிவில் ஆட்சியை ஏற்படுத்த வலியுறுத்தி பொதுமக்கள் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக போராட்டக் குழுவினருக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கர்த்தூமில் உள்ள ராணுவ தலைமையகத்திற்கு வெளியிலும் போராட்டம் வெடித்ததால் போராட்டக்காரர்களை ஒடுக்க ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் குழந்தைகள் உள்பட 61 பேர் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரினை பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என கிருஸ்தவ கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவர் போப் பிரன்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து ரோம் நகர் புனித பிட்டர் சதுர்கத்தில் போது மக்களுடனான வார பிராத்தனை நிகழ்ச்சியில் பேசிய போப் பிரான்சிஸ்,

சூடான் நாட்டில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப்போரில் போராட்டக்காரர்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள் உள்பட 61 பேர் பலியாகினர் என்ற செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. மேலும் இந்த பிரச்சனையினை பேச்சுவார்த்தை மூலமாக உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Pillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு

அம்மியில் அரைத்து, மசாலா உதிராமல் மீன் வறுவல் | Traditional Fish fry in tamil | Viraal meen varuval

How to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil

Nattu kozhi Pepper Fry in Tamil | நாட்டு கோழி மிளகு கறி | Chicken Pepper fry | Country Chicken Fry

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Chicken Popcorn Recipes in Tamil |சிக்கன் பாப்கார்ன்|Crispy Fried Chicken|Chicken Recipes in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து