தலிபான்களுடன் துப்பாக்கி சண்டை: ஆப்கனில் 5 போலீஸ் அதிகாரிகள் உள்பட 6 பேர் பலி

திங்கட்கிழமை, 10 ஜூன் 2019      உலகம்
Afghanistan Gun shot 2019 06 10

காபூல் : ஆப்கானிஸ்தானில் போலீஸ் சோதனைச்சாவடியில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் போலீசாருக்கும் நிகழ்ந்த துப்பாக்கி சண்டையில் 5 போலீஸ் அதிகாரிகள் உள்பட 6 பேர் பலியானார்கள்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதுடன், பாதுகாப்பு படைகளையும், போலீஸ் சோதனைச் சாவடிகளையும் குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த வகையில் அங்கு தக்கார் மாகாணத்தில் கததவ்ஜா பகாவ்தீன் மாவட்டத்தில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடி ஒன்றை நேற்று முன்தினம் அதிகாலை தலிபான் பயங்கரவாதிகள் சுற்றி வளைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். உடனே போலீசாரும் துப்பாக்கிகளால் பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே 2 மணி நேரத்துக்கும் மேலாக துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இந்த சண்டையின் முடிவில் 5 போலீஸ் அதிகாரிகள், ஒரு போலீஸ்காரர் என 6 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து தலிபான் பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். சம்பவ இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து விசாரணை நடத்துகின்றனர். தலிபான் பயங்கரவாதிகளை தேடும் வேட்டையையும் அவர்கள் முடுக்கி விட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து