பாக். திரும்பினார் ஷாபாஸ் ஷெரீப்

திங்கட்கிழமை, 10 ஜூன் 2019      உலகம்
Shahbaz Sharif 2019 06 10

இஸ்லாமாபாத் : லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவர், ஷாபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் திரும்பினார்.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவர், ஷாபாஸ் ஷெரீப். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இவர் மீதும் ஊழல் வழக்குகள் உள்ளன. வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டோர் பட்டியலில் இவரது பெயரும் இடம் பெற்றிருந்தது. ஆனால் லாகூர் ஐகோர்ட்டு அவரது பெயரை வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டோர் பட்டியலில் இருந்து நீக்குமாறு உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து, அவர் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி லண்டன் செல்வதாக அறிவித்தார். அவர் அங்கு 10-12 நாட்கள் தங்கக் கூடும் என அப்போது தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் தனது லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு  பாகிஸ்தான் திரும்பினார். லாகூர் விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை பாகிஸ்தான் முஸ்லிம்லீக் (நவாஸ்) கட்சியின் தொண்டர்கள் திரளாக கூடி வந்து வரவேற்று மாதிரி நகரில் உள்ள அவரது வீடு வரை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து