முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல நடிகர் கிரேஸி மோகன் மாரடைப்பால் காலமானார்

திங்கட்கிழமை, 10 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பிரபல நகைச்சுவை நடிகரும், பிரபல வசனகர்த்தவுமான கிரேஸி மோகன் நேற்று மாரடைப்பால் காலமானார்.

சென்னையை சேர்ந்த கிரேஸி மோகன் கடந்த 1952-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் மோகன் ரெங்காச்சாரி. மெக்கானிக்கல் பொறியல் பட்டதாரியான இவர், இயல்பிலேயே நகைச்சுவையாக பேசக் கூடியவர். அதுவே அவரை நாடகங்கள் மற்றும் சினிமாவில் எழுத வைத்தது.

கே.பாலசந்தரின் பொய்க்கால் குதிரை படம் மூலம் சினிமாவில் முதன்முதலாக வசனகர்த்தவாக அறிமுகமானார். அதன்பிறகு கமல்ஹாசனின் நெருங்கிய நட்பு கிடைக்க அவரின் பல படங்களுக்கு வசனங்கள் எழுத ஆரம்பித்தார். கமலின் பெரும்பாலான நகைச்சுவை படங்களுக்கு இவர் தான் வசனகர்த்தாவாக பணியாற்றினார்.

அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், இந்திரன் சந்திரன், சின்ன மாப்ளே, மகளிர் மட்டும், சதி லீலாவதி, அவ்வை சண்முகி, ஆஹா, அருணாச்சலம், காதலா காதலா, தெனாலி, பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்பந்தம், வசூல் ராஜா ஆகிய படங்களின் இவரின் நகைச்சுவையை மறக்க முடியாதது.

நடிகராகவும், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், சின்ன வாத்தியார், இந்தியன், அவ்வை சண்முகி, அருணாச்சலம், காதலா காதலா, பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். ஆகிய படங்களில் அவர் நடித்துள்ளார். குறிப்பாக இந்தியன் படத்தில் பார்த்தசாரதி கதாபாத்திரமும், வசூல்ராஜா படத்தில் டாக்டர் மார்கபந்து கதாபாத்திரமும் ரசிகர்களிடம் தனி வரவேற்பை பெற்றவை.

தன் சகோதரர் மாது பாலாஜி உடன் இணைந்து பல மேடை நாடகங்களை இயற்றி உள்ளார். குறிப்பாக இவர்களது கூட்டணியில் வெளி வந்த, மாது பிளஸ் 2, மேரேஜ் மேட் இன் சலூன், அலாவுதீனும் 100 வாட்ஸ் பல்பும், மாது மிரண்டால், காதலிக்க மட்டும் மாது உண்டு, மதில் மேல் மாது, சாக்லேட் கிருஷ்ணா போன்றவை மக்களால் பெரிதும் ரசிக்க வைத்தவை. இவரின் சாக்லேட் கிருஷ்ணா நாடகம் 500 முறை மேடையேறி இருக்கிறது. தமிழகம், இந்தியா தவிர்த்து வெளிநாடுகளிலும் 6,500 நாடகங்களை இயற்றி இருக்கிறார். 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 40 ஆயிரம் வெண்பாக்களை எழுதி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து