காஷ்மீர் சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கு: முக்கிய குற்றவாளிகள் மூன்று பேருக்கு ஆயுள் - போலீஸ் அதிகாரிகள் உள்ளிட 3 பேருக்கு கடுங்காவல் தண்டனை

திங்கட்கிழமை, 10 ஜூன் 2019      இந்தியா
kashmir girl murder case 2019 06 10

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்வாவில் 8 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என பதான்கோட் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் முக்கிய குற்றவாளிகள் 3 பேருக்கு ஆயள் தண்டனையும், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 3 பேருக்கு கடுங்காவல் தண்டனையும் விதித்துள்ளது. மேலும் சிறுமி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விஷால் என்பவரை நீதிமன்றம் விடுதலை செய்தது.

கூட்டு பலாத்காரம்

காஷ்மீரில் கடந்தாண்டு ஜனவரியில் நாடோடி பழங்குடியைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, கதுவா கிராமத்தில் உள்ள கோயிலில் மயக்க நிலையில் 4 நாட்கள் சிறை வைக்கப்பட்டார். பின் அவரை சிலர் கூட்டு பலாத்காரம் செய்து அடித்து கொன்றனர். அந்த சிறுமியின் உடல் சிதைந்த நிலையில் கடந்த வருடம் ஜனவரி 17-ம் தேதி வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

8 பேர் கைது...

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில் ஒரு சிறுவன் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவன் சிறுவன் என்பதால் அவன் மீது வழக்கு தொடரப்படவில்லை.

இந்த பலாத்கார கொலை தொடர்பாக, முக்கிய குற்றவாளியான, ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அலுவலரும், கிராம தலைவருமான சஞ்சிராம், அவரது மகன் விஷால், சஞ்சிராமின் நண்பர் பர்வேஷ் குமார், வழக்கின் முக்கிய ஆதாரங்களை அழிக்க சஞ்சிராமிடம் இருந்து ரூ.4 லட்சம் லஞ்சம் பெற்றதாக காவல்துறை துணை ஆய்வாளர் ஆனந்த் தத்தா, காவலர் திலக் ராஜ், இரண்டு சிறப்பு போலீஸ் அதிகாரிகள் தீபக் கஜூரியா மற்றும் சுரேந்தர் வர்மா உள்ளிட்ட 7 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

6 பேர் குற்றவாளிகள்...

சிறுமி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 4 காவலர்களும் அடங்குவர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதை வக்கீல்கள் சிலர் தடுத்ததால், இந்த வழக்கு ஜம்முவில் இருந்து பஞ்சாப் மாநிலம் பதன்கோட் நீதிமன்றத்துக்கு மாற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை கடந்த 3-ம் தேதி முடிவடைந்த நிலையில் பதன்கோட் சிறப்பு நீதிமன்ற நீதிபதி டேஜ்வீந்தர் சிங் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் கத்வா சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

போலீஸ் அதிகாரிகள்...

சஞ்சி ராமின் மகன் விஷால், சம்பவம் நடந்த நேரத்தில் தான் பள்ளியில் தேர்வெழுதி கொண்டிருந்ததாக கூறி அளித்த மனுவை ஏற்ற நீதிமன்றம் அவனை விடுவித்துள்ளது. மேலும் 6 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரத்தையும் பதன்கோட் சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. முக்கிய குற்றவாளியான ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அலுவலரும், கிராம தலைவருமான சஞ்சி ராம், சஞ்சி ராமின் நண்பர் பர்வேஷ் குமார், சஞ்சி ராமிடம் இருந்து ரூ 4 லட்சத்தை பெற்று கொண்டு ஆதாரங்களை அழித்த தலைமை காவலர் திலக் ராஜ், விசாரணை நடத்திய உதவி ஆய்வாளர் ஆனந்த் தத்தா , இரண்டு சிறப்பு போலீஸ் அதிகாரிகள் தீபக் கஜூரியா மற்றும் சுரேந்தர் வர்மா ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர்.

3 பேருக்கு ஆயுள்...

இந்த வழக்கில் குற்றவாளிகள் 3பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. முக்கிய குற்றவாளிகள் சஞ்சிராம், தீபக் கஜூரியா, பர்வேஷ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து பதான்கோட் நீதிமன்றம் உத்தரவிட்டது. மற்ற 3 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து பதான்கோட் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து