முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கெய்ல் கோரிக்கையை நிராகரித்த ஐ.சி.சி.

திங்கட்கிழமை, 10 ஜூன் 2019      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : டோனியின் கையுறை முத்திரையை நிராகரித்தது போல, வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயிலின் கோரிக்கையையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிராகரித்துள்ளது.

நீக்க கோரிக்கை...

உலகக் கோப்பை தொடரில், இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான போட்டி நடந்தபோது, விக்கெட் கீப்பர் டோனி, பாரா மிலிட்டரியின் பாலிடன் முத்திரை பதித்த கையுறைகளை அணிந்திருந்தார். இதற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் கிடைத்தன. சில மீடியா இதுபற்றி விவாதங்களையும் நடத்தின. இதற்கிடையே, டோனி தன் கையுறையில் இருக்கும் முத்திரையை நீக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வலியுறுத்தியது. முதலில் விளக்கம் அளித்த இந்திய கிரிக்கெட் வாரியம், பின்னர் ஐசிசி கூறியதை ஏற்று, டோனியிடம் அதை நீக்கக் கேட்டுக்கொண்டது.

கெயில் கோரிக்கை...

இதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின்போது, பாலிடன் முத்திரை இல்லாத கையுறையை டோனி பயன்படுத்தினார். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கிறிஸ் கெய்லின் கோரிக்கையையும் ஐசிசி நிராகரித்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது.  ’யுனிவர்சல் பாஸ், சிக்சர் மன்னன் என்று கூறப்படும் கெய்ல், தனது பேட்டில் யுனிவர்சல் பாஸ் என்ற லோகோவை பயன்படுத்த அனுமதி கேட்டார். ஆனால் ஐசிசி அவர் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. வீரர்கள் அணியும் ஜெர்ஸி, பயன்படுத்தும் பொருட்களில் அரசியல், மதம் மற்றும் இன உணர்வுகள் இருக்கக் கூடாது என்று விதி இருக்கிறது. அதை கெய்லிடம் கூறினோம். ஏற்றுக்கொண்டார்’’ என்று ஐசிசி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பயன்படுத்த தடை...

அவர் மேலும் கூறும்போது, ’’இதற்கு முன், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கருப்பு பட்டை அணிந்து ஆடியதால் இங்கிலாந்து வீரர் மொயின் அலிக்கு தடை விதிக்கப்பட்டது. இப்போது கெயிலுக்கு அனுமதி அளித்தால், அவர் நாளைக்கே ’ஃபிரி பாலஸ்தீனம்’ என்ற கருப்பு பட்டை அணிய அனுமதி கேட்கலாம். ஐசிசி தொடர்களில் ’அன்பு’ என்ற வார்த்தையை கூட வீரர்கள் தங்கள் உடையிலோ, பேட்டிலோ பயன்படுத்தக் கூடாது. அதே நேரம், விழிப்புணர்வுக்காக நடத்தப்படும் இருதரப்பு தொடர்களில் பயன்படுத்திக் கொள்ள விதி இருக்கிறது. அதனால்தான், புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்களின் குடும்பத்துக்கு நிதி திரட்டுவதற்காக நடந்த தொடரில், ராணுவ தொப்பியை பயன்படுத அனுமதித்தோம்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து