போராட கற்றுக்கொடுத்த கிரிக்கெட்:- ஓய்வுபெற்ற யுவராஜ் சிங் உருக்கம்

திங்கட்கிழமை, 10 ஜூன் 2019      விளையாட்டு
Yuvraj Singh earnestly 2019 06 10

புதுடெல்லி : சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த யுவராஜ் சிங், கிரிக்கெட் தனக்கு போராட கற்றுக்கொடுத்ததாக உருக்கமாக தெரிவித்தார்.

ஓய்வு பெற...

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக யுவராஜ் சிங் நேற்று அறிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், "25 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கை எனக்கு நிறைய கற்றுக்கொடுத்துள்ளது. தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற விரும்புகிறேன். கிரிக்கெட் எனக்கு போராட கற்றுக்கொடுத்தது, துவண்டு விழுந்தால் எப்படி எழுந்து ஓட வேண்டும் என  போதித்தது.  

மோசமாக...

இந்திய அணிக்காக 400 போட்டிகளுக்கு மேல் விளையாடியது என் அதிர்ஷ்டம். 28 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றதைவிட வேறென்ன வேண்டும். என் கிரிக்கெட் வாழ்க்கையில் நான் மிகவும் மோசமாக விளையாடியது 2014ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தான். அப்போட்டியில் 21 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தேன். அப்போதே என் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததை உணர்ந்தேன் " என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து