டோனியை கண்டு வியந்த கோலி

திங்கட்கிழமை, 10 ஜூன் 2019      விளையாட்டு
virat look 2019 06 10

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் லண்டன் ஓவலில் நடந்த 14-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் களம் இறங்கியது. இந்த ஆட்டத்தில் சில சுவாரஸ்யமான சம்பவங்கள் அரங்கேறியது. இதில் ஸ்மித்தை கிண்டல் செய்த ரசிகர்களிடம் அவரை உற்சாகப்படுத்துமாறு இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

மேலும் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பிஞ்ச் ரன் அவுட் என்ற முறையில் வெளியேறினார். அப்போது வீரர்கள் அறைக்கு சென்று பேட்டால் அறையின் கதவை கோபத்துடன் அடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் டோனி, விராட் கோலி பற்றிய வீடியோவும் வைரலாகி வருகிறது.

இந்த போட்டியில் டோனி 14 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். இதில் 3 பவுண்டரி 1 சிக்சர் அடங்கும். மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தில் டோனி லெக் திசையில் இமாலய சிக்ஸ் ஒன்றை அடித்தார். அந்த சிக்சரை பார்த்த கேப்டன் விராட் கோலி ஆச்சரியத்துடன் பார்த்து டோனியிடம் சிரித்தபடி பேசினார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து