நியூயார்க்கில் அடுக்குமாடி கட்டிடம் மீது ஹெலிகாப்டர் மோதி விபத்து: விமானி பலி

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2019      உலகம்
newyork helicopter accident 2019 06 11

நியூயார்க் : அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் மீது ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானதில் விமானி பலியானார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மேன்ஹேட்டன் பகுதியில் 51 மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. அந்த கட்டிடத்தின் உச்சியில் ஹெலிகாப்டர் இறங்குதளம் உள்ளது. அந்த இறங்குதளத்தில் நேற்று முன்தினம் ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்கும் போது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இது பற்றி நடந்த முதற்கட்ட விசாரணையில், மோசமான வானிலை காரணமாக விமானி ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மோதியவுடன் கட்டிடத்தில் தீப்பற்றியது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ஹெலிகாப்டரை இயக்கிய விமானி உயிரிழந்தார். இந்த விபத்தில் கட்டிடத்தில் இருந்தவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. இதில் பயங்கரவாத செயல் எதுவும் இல்லை என நியூயார்க் நகர ஆளுநர் ஆண்ட்ரூ குவாமோ கூறியுள்ளார். இந்த விபத்து பற்றி கேட்டறிந்த அதிபர் டிரம்ப், தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து