பிரிவினைவாத தளபதிகள் உள்பட 8 பேர் சுட்டு கொலை - கேமரூன் படையினர் அதிரடி

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2019      உலகம்
separatist commanders killing 2019 06 11

கேமரூன் : கேமரூனில் பிரிவினைவாத தளபதிகள் உள்பட 8 பேர் அந்நாட்டு படையினரால் சுட்டு கொல்லப்பட்டனர்.

கேமரூன் நாட்டில் பிரிவினைவாத படைகள் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த 2017-ம் ஆண்டு நவம்பரில் ஆங்கிலம் பேசும் 2 பகுதிகளை கைப்பற்றியுள்ளோம் என அறிவித்தன. இதனால் அந்த பகுதியில் வசித்த 4 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் அச்சமடைந்து அங்கிருந்து புலம்பெயர்ந்தனர். தொடர்ந்து அந்நாட்டு படை வீரர்களுக்கும், பிரிவினைவாத படையினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வந்தது.

இந்நிலையில் சமீபத்திய சண்டையில், அந்நாட்டின் ஆங்கிலோபோன் பகுதிக்கு வடமேற்கே புய் என்ற பகுதியில் 2 பிரிவினைவாத தளபதிகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.  இதே போன்று கேமரூன் ராணுவ உயரதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டார். பல வீரர்கள் காயமடைந்து உள்ளனர் என ராணுவ வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து