பள்ளி, கல்லூரிகளில் யோகா கட்டாய பாடம் - அடுத்த கல்வி ஆண்டு முதல் அமல்

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2019      இந்தியா
shripad Naik 2019 06 11

பனாஜி : அடுத்த கல்வி ஆண்டில் இருந்து பள்ளி, கல்லூரிகளில் உடற்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் யோகாவை கட்டாய பாடமாக ஆயுஷ் துறை மந்திரி ஸ்ரீபாத் நாயக் தெரிவித்தார்.

அடுத்த கல்வி ஆண்டில் இருந்து பள்ளி, கல்லூரிகளில் உடற்கல்வி பாடத் திட்டத்தின் கீழ் யோகாவை கட்டாய பாடமாக இடம்பெற செய்ய வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் திட்டவரைவு ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. இத்தகவலை ஆயுஷ் துறை அமைச்சர்  ஸ்ரீபாத் நாயக் தெரிவித்தார்.

இந்த திட்டவரைவுக்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும், அப்படி கிடைத்தால், அடுத்த கல்வி ஆண்டில் இருந்து பாடத்திட்டத்தில் யோகா இடம்பெறும் என்றும் அவர் கூறினார். சர்வதேச யோகா தினத்தையொட்டி, வருகிற 21-ம் தேதி ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் நடக்கும் முக்கிய யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என்றும் ஸ்ரீபாத் நாயக் தெரிவித்தார். உலகம் முழுவதும் இருந்து யோகா குருக்கள், சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறினார்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து