கங்கை நதியில் மூழ்கி 7 பேர் பலி - ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2019      இந்தியா
gangai river 7 kill 2019 06 11

அம்ரோகா : உத்தர பிரதேச மாநிலத்தில் கங்கை நதியில் குளித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.

உத்தர பிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டம், லுகாரி கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் முடியிறக்கும் நிகழ்ச்சி மற்றும் வழிபாடு நடத்துவதற்காக நேற்று முன்தினம் பிரிஜ்காட் பகுதிக்கு வந்திருந்தனர். பின்னர், அங்குள்ள கங்கை நதியில் குளித்தனர். அப்போது 2 பேர் ஆழமான பகுதிக்கு சென்றதால் மூழ்கினர். அவர்களை காப்பாற்றுவதற்காக மற்றவர்களும் ஆற்றுக்குள் குதித்தனர். அவர்களும் மூழ்கினர். இவர்களில் 3 பேர் நீந்தி கரை சேர்ந்த நிலையில், மற்ற 7 பேரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேரிடர் மீட்புக் குழுவினர், ஆற்றில் மூழ்கியவர்களில் 5 பேரின் உடல்களை மீட்டனர். 2 பேரின் உடல்களை தேடி வருகின்றனர்.  இந்த துயர சம்பவத்திற்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். இறந்து போனவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கும் படி மாநில அரசுக்கு மாவட்ட கலெக்டர் கடிதம் எழுதி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து